தானே பாதை வெட்டி தனித்து பயணித்த மலையக இலக்கியம்: வீரகேசரி முன்னாள் ஆசிரியர் வி. தேவராஜ் !

0
35

கனடா “மலையகா ” நூல் வெளியீடு சிறப்பு சொற்பொழிவு.

பாகம் (2)

அடுத்ததாக தமிழக இலக்கிய பாரம்பரியத்துடன் தமது இலக்கிய உறவு மற்றும்  பிணைப்பு பற்றிப் பேசுவது. இந்த உறவு
மலையக மக்களின் இரத்தத்துடன் கலந்துவிட்ட உணர்வு பூர்வமான வி டயமாகும்.
அதே வே ளையில் இலங்கையில் இலங்கைத்தமிழர்களை மையமாகக் கொண்டு  செழுமையான தமிழ் இலக்கி ய
பாரம்பரியம் உள்ளது.
ஆனா ல் இந்த இலக்கி ய பா ரம்பரி யங்களுக்கு அப்பா ற்பட்ட நி லை யி ல்தா ன் மலை யக இலக்கியம் தோற்றம்
பெற்றுள்ளது.
மொத்தத்தில் கூறுவதாயின் மலையக இலக்கியம் என்பது மலை யகத்துக்கே உரிய தனித்துவமான இலக்கியப்
பாரம்பரியமாக பர்ணமித்ததுள்ளது.
கடைசி கண்டி மன்னர்காலத்து இலக்கியத்துடன் மலையக இலக்கியம்  தொடர்புபட்டதல்ல. ஈழத்து இலக்கிய
பாரம்பரியத்தில் இருந்தும் மலையக இலக்கியம் வேறுபட்டது.
அதுபோல் தமிழக பாரம்பரிய பண்பாட்டு உணர்வுகள் மக்களின் மனங்களி ல் இருந்த போ தும் மலையக இலக்கியம்
தானே பாதை வெட்டி தனித்துவமாகப் பயணிக்கத் தொடங்கியதே மலையக இலக்கி யமாகும்.
பிரதேச இலக்கியமாகவே நோக்கப்பட்டது.
எனினும் ஈழத்து இலக்கியப் பரப்பி ல் மலையக இலக்கியம் அண்மைக்காலம் வரை பிரதேச இலக்கியம் என்ற
வரையரைக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது. தற்போதுதான் இந்த நிலைமா ற்றத்துக்குள்ளாகி ஈழத்து தமிழ்தேசிய
இலக்கியத்தின் ஒரு அங்கமாக மலையக இலக்கியம் நோக்கப்படுகின்றது.
பேராசிரியர் கா .சிவத்தம்பி
எனவேதான் பேராசிரியர் கா .சி வத்தம்பி சேர் அவர்கள்
“மலையக இலக்கியம் என்பது தமி ழ் இலக்கியத்தி ன் தனித்துவமான அம்சங்களை  கொண்டுள்ள அதே சமயம்
ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பிரிக்க முடியா  மிக முக்கிய கூறாகவும் அமைந்து கா ணப்படுகின்றது” என்று
குறிப்பிடும் அவர் “மலையக இலக்கியத்தினை புறக்கணித்தோ அல்லது ஒதுக்கி  விட்டோ ஈழத்து தமிழ் இலக்கிய
வரலாற்றை எழுத முனைவது பூரணத்துவமுடை ய வரலாறு எழுதும் முயற்சியாக அமையாது” என்று பதிவிட்டுள்ளார்.
மலையக இலக்கியம் பற்றிய ஆய்வின் போது காணப்படுகின்ற சிக்கல்கள் பற்றி ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
1. மலையக பிரதே ச இலக்கியவாதிகள் பற்றி முழுமையான விபரப்பட்டியலோ தகவல்களோ இல்லை .
2. மலை யக எழுத்தா ளர்களின் படைப்புகளில் அனேகமானவை நூலுருபெறவில்லை .
மூத்த எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் கூட இதுவரை நூலுருப்பெறவில்லை .3. மலை யக இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்திருந்த பல ஆக்கங்கள் ஆய்வுகள் என்பன மலையகத்தில் இடம்
பெற்ற இனவன்முறைகளின் போது அழிந்து வி ட்டன.
4. மலையக கலை இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்துள்ள பத்திரிகை துணுக்குகளைத் தேடிப்பெ றுவதில் பல
நடை முறை சிக்கல்கள் உள்ளன.
5. மலையக படைப்புகள் எழுத்தாளர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவணகாப்பகம் ஒன்றில்லை .
6.. மலையக இலக்கிய வரலாறு பற்றிய பூரணத்துவமான ஆய்வு நூல் ஒன்று இதுவரை காலமும் எழுதப்படவி ல்லை .
7. பேராதெனிய கல்கலைக்கழகத்தில் கலாநிதி துரை மனோ கரன் கலாநிதி அருணா சலம் போன்ற
விரிவுரையாளர்களின் ஊக்குவிப்பாலும் வழிகா ட்டுதலிலும் மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்காக மலையக
இலக்கியம் குறித்து ஆய்வூகளை மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். இத்தகை ய ஆய்வுகள் நூலுருப்
பெறவேண்டும் அல்லது இந்த ஆய்வுகள் குறி த்த தகவல்கள் வெளிக்கொ ண்டுவரப்படல் வேண்டும்.
தமிழக கிராமங்களை மலையகத்தில் காணலாம்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான ஒரு விடயத்தை பதிவிடுதல் பொருத்தமென நினை க்கி ன்றே ன். தமி ழகத்தி ல்
இருந்து மக்கள் குடிபெ யர்ந்தபோ து தனி நபர்களா க படகுகளி லோ அல்லது கப்பல்களி லோ ஏறி இலங்கை க்கு
வரவில்லை . கிராமம் கிராமமாகவே கப்பலேறினர்.

அநத வகையில் மலையகத்தில் இந்த மக்களின் குடியேற்றத்தைப்பார்த்தால் தமிழக கிராமங்களை அப்படியே
பெயர்த்து மலையகத்தில் பதித்துவிட்ட அமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்தக்  கிராமக் குடிப்பெயர்வு தமிழக
கிராமங்ளின் பண்பாட்டு பாரம்பரியங்களை அப்படியே மலை யகத்தில் புதிய சூழலுக்குள்ளும் தமக்கிடையிலான
உறவுகளின் மூலமும் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
மலையக மக்களின் படை ப்புக்களை நோக்குகின்ற போது இலக்கியப் படைப்புக்கள் அம் மக்கள் வாழத் தலைப்பட்ட
சூழலில் பிறந்தவைகளாக இருந்தபோதும் அதன் வேர்கள் தமிழக கிராமங்களில் இருந்து ஊற்றெடுக்கி ன்றன
என்பதை அவதானிக்கலாம்.
ஏனெனில் தமிழகத்தில் இருந்து இலங்கை நோக்கி குடிபெயர்ந்த போது தாம் பிறந்த மண்ணின் கலாசா ர பண்பாட்டு
பாரம்பரியங்களையும் தம்முடன் அணைத்து இணை த்து எடுத்து வந்துள்ளனர். எனதோன் மலையக மக்களின்
ஆரம்பகால கலை இலக்கிய வெளிப்பாடுகளாக கதைப்பாடல்கள் – நா ட்டார் கதை கள் – நாட்டார் பாடல்கள் வடிவில்
கா ணப்படுகின்றன.

தொடரும் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here