இவ்வுலகிலே சீரும் சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால் அனைவருமே நம்மை பெற்றெடுத்த
தாய்மார்களை தான் கூறுவோம்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்ப கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்கு பின்னால் பெண்களின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலேயே பல்வேறு விதமாக பணிகளில் ஈடுபட்டு ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிற்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆனால் நடைமுறையில் அவை வேறுபட்ட முறையில் இருக்கிறது. பெண்கள் பல்வேறு வன்முறைகளுக்கும்
அடக்குமுறைகளுக்கும் இலக்காகி தனது சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை பெண்களுக்கான சமூக அந்தஸ்தினை ஓரளவேனும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் அரசியல் அதிகாரத்தினை வளர்த்தெடுப்பதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.
குறிப்பாக மலையகத்திலிருந்து இன்று ஒவ்வொரு சபைகளிலும் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படும் வகையில் கனிசமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளுராட்சி மன்றங்களோடு மாத்திரம் நின்றுவிடாது நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றம் வரையும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
அத்தகைய சூழலை தோற்றுவிக்க மகளிர் தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.