நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட பகுதியில் இரண்டு சிறுத்தைக் குட்டிகளை நோர்வூட் பொலிஸார் 21.09.2017 மீட்டுள்ளனர்.
கற்குகைக்குள் இருந்த சிறுத்தைக் குட்டிகளை கண்ட பிரதேசவாசிகள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்தனர். விரைந்து சென்ற பொலிஸார் இரண்டு சிறுத்தை குட்டிகளையும் மீட்டுள்ளனர்.
தாய் சிறுத்தையை இழந்த நிலையில் அநாதரவாக காணப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை மஸ்கெலியா நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
– நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்