தாய் வெளிநாட்டில் – சித்தியால் சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை பொலிஸார் மீட்டனர்; பொகவந்தலாவையில் கொடூரம்!

0
130

பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் தரம் 05ல் கல்விபயிலும் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்கு உட்படுத்தபட்ட சித்தியையும் சிறுமியின் மைத்துனர் ஒருவரையும் 04.10.2017. சனிக்கிழமை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதோடு குறித்த சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தர்மராஜ் சர்மிலா எனும் பத்துவயது சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுமியின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்துவருவதாகவும் குறித்த சிறுமி கடந்த ஒன்பது வருடகாலமாக தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்ததாகவும் கடந்த வருடம் இவரை சிறுமியின் சித்தியான மஞ்சுளா என்பவரிடம் ஒப்படைத்து விட்டு இந்த சிறுமியின் பாட்டி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

IMG_20171104_102529

தர்மராஜ் சர்மிலாவிற்கு அவருடை கல்வி நடவடிக்கைகாகவும் சிறுமியின் உணவு போன்ற செலவுகளுக்கும் மாதாந்தம் அவரின் தாய் வெளிநாட்டில் இருந்து சிறுமியின் சித்திக்கு 15 ஆயிரம் ருபா பணம் அனுப்புவதாக தெரிவிக்கபடுகிறது.

எனினும் சிறுமியை மஞ்சுலா என்பவர் தொடர்ந்து அவர் வீட்டில் ஒரு வேலைக்காரியாக நடத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

IMG_20171104_103259

04.11.2017.சனி கிழமை காலை 6.30 மணி அளவில் தரமராஜ் சர்மிலா என்ற சிறுமியை கடுமையாக தாக்கியதில் அந்த பத்துவயது சிறுமி தப்பி ஒடி அயல் வீடு ஒன்றில் அடைக்கலம் புகுந்தாகவும் சிறுமியை தேடி சென்ற அவரின் மைத்துனர் என சொல்லப்படும் செந்தில் என்பவர் தடி ஒன்றினால் கடுமையாக தாக்கி சிறுமியை பிடித்து வெளியில் தள்ளிவிட்டதாக மேற்படி சிறுமியான தர்மராஜ் சர்மிலா பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமுலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் போனகோட் தோட்டமக்களால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலை அடுத்து குறித்த தோட்டத்திற்கு சென்ற பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளதோடு சிறுமியின் சித்தியையும் மைதுனரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் உடம்பில் உற்காயங்கள் காணப்படுவதோடு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் மாவட்டவைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ள தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனவே கைது செய்யபட்ட இருவரையும் 05.11.2017.ஞாயிற்றுகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்லதாவ நிருபர்

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here