திகாவின் விருப்பு வாக்குகளை விடவும் ரிஷியின் தலைமையிலான கட்சிக்கு வாக்குகள் அதிகம்!!

0
123

திகாவின் விருப்பு வாக்குகளை விடவும் ரிஷியின் தலைமையிலான கட்சிக்கு இத்தேர்தலில் சாதனை வாக்குகள்
நல்லாட்சி அலை வீசிய காலத்தில் ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மலையக புதிய கிராமங்கள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பர்தை விடவும் அதிகளவான வாக்காளர் அடிப்படை மலையகத்தில் உண்டு என்பதனை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலையக தேசிய முன்னணியின் தலைவர், கூட்டு எதிர்க்கட்சியின் பொறுப்பாளர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் நிரூபித்துக் காண்பித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலைத் தொடாந்து மலையக தேசிய முன்னணியின் வாக்கு அடிப்படை, பெற்ற ஆசனங்கள் பற்றி பல்வெறு தரப்பினராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்தக் கேள்விக் கனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மலையக தேசிய முன்னணியின் அரசியல் பீடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மலையகத்தில் அமோக வெற்றியீட்டிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி;த் தலைவருமான பழனி திகாம்பரம் சுமார் 105000 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

இந்த தேர்தலின் போது கலாநிதி ரிஷி செந்திராஜ் தலைமையிலான மலையக தேசிய முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதில் அளப்பரிய பங்களிப்பினை வழங்கியிருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பல்வேறு கட்சிகளின் கூட்டணியாக இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தலைமையிலான மலையக தேசிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான இடதுசாரி முன்னணி, தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன உள்ளிட்ட 12 கட்சிகள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் கலாநிதி ரிஷி செந்தில்ராஜின் மலையக தேசிய முன்னணியின் தலைமையில் மாநகரசபை, நகரசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்காக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களும் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர் என்பது மறுப்பதிற்கில்லை, என்ற போதிலும் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் ஸ்ரீலங்க பொதுஜன முன்னணியின் மலர்மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மலையக தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்டனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலையக தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான பொதுஜன முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 84 உறுப்பினர்களை இம்முறை வென்றெடுத்துள்ளது.
இந்த 84 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலாநிதி ரிஷி செந்தில்ராஜின் தலைமையிலும் வழிகாட்டுதல்களிலும் எதிர்காலத்தில் கிராமிய நகர மட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொத்தமாக 107015 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய அமைச்சர் திகாம்பரம் அவர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கையை விடவும் இந்த வாக்கு எண்ணிக்கை அதிகம் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி அதிகார பலமோ, பண பலமோ இன்றி, மக்களின் ஏகோபித்த ஆதரவிற்கு மத்தியில் நாட்டின் ஏனைய மாவட்டங்களைப் போன்றே, மலையக தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நுவரெலியா மாவட்டத்திலும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் பிரதான சக்தியாக விஸ்பரூபம் எடுத்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நுவரெலியா மாவட்டத்தில் மலையக தேசிய முன்னணியின் பலத்தை பறைசாற்றுவதற்கான ஓர் பொன்னான வாய்யப்பாக அமைந்திருந்தது.

சாதாரண பொதுமக்களின் நாடித்துடிப்பினை புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதுடன், நேர்மையான கொள்கைகளின் அடிப்படையில் அரசியலை முன்னெடுக்கும் கட்சி என்ற ரீதியில் அண்மைய தேர்தல் வெற்றியானது மலையக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றிச் சாதனையாகவே கருதப்பட வேண்டும் எனக் கூறின் அது மிகைப்படாது.
முதன்மைக் கட்சிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கட்சிகளை விடவும் மலையக தேசிய முன்னணி இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

மலையக தேசிய முன்னணியின் வெற்றி தொடர்பில் எழுப்பபட்டு வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

அரசியல் பீடம்
மலையக தேசிய முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here