தற்கொலை செய்துகொள்ளவே கைக்குண்டை வீட்டுக்கு கொண்டு சென்றேன். அது தவறுதலாக பஸ்ஸினுள் வைத்து வெடித்து விட்டது”
இந்த வெடிப்பு சம்பவத்துக்கு இராணுவ அதிகாரி ஒருவர் எடுத்து சென்ற கைக்குண்டே காரணம் என விசாரணைகள் மூலம் தெரிய வந்ததது. கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான இராணுவ அதிகாரி அதிர்ச்சி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
‘வீடு கட்டுவதற்காகவும் வாகனம் வாங்குவதற்காகவும் 20 இலட்சம் ரூபா கடன் .
இந்த கடனை தற்போது திருப்பி கொடுக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.
நான் தற்கொலை செய்துகொண்டால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபட முடியும் என தீர்மானித்தேன்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வாகனத்தில் இருந்த இந்த கைக்குண்டை கண்டு எடுத்தேன்.
பின்னர் அதனை காட்டில் மறைத்து வைத்து 2017 ஆம் ஆண்டு மாத்தளையில் உள்ள எனது வீட்டுக்கு கொண்டு வந்தேன்.
சம்பவம் தினம் தற்கொலை செய்து கொள்வதற்காக குண்டை எடுத்துச் செல்லும் போது அது தவறுதலாக வெடித்து விட்டது என தெரிவித்துள்ளார்.