“திரிபோஷா” தொழிற்சாலைக்கு பூட்டு

0
8

அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவான திரிபோஷா சோளம் மற்றும் சோயா போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தட்டுப்பாடு காரணமாக சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில், திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு மிக சிக்கலான பிரச்சினையாக எதிர்காலத்தில் மாறும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்கிறது எனவும், வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here