திருமணத்தில் முடிந்த நெடுநாள் காதல்! – புகைப்படத்துடன் பதிவிட்ட விக்னேஷ் சிவன்!

நீண்ட காலமாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் இன்று நடந்து முடிந்த நிலையில் அதன் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் செல்போனில் படம்பிடிக்க கூட அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பதிவிட்டு, கடவுளின் அருளாலும், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரின் வாழ்த்துகளோடும் தங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.May be an image of 2 people, people standing and indoorMay be an image of 1 person and standingMay be an image of 3 people, people standing and flower