திருமணம் ஆகாத மன உளைச்சலில் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு! பரபரப்பு சம்பவம்!

0
112

திருமணம் ஆகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே இடம்பெற்றுள்ளது.மேலும் இந்த சம்பவத்தில் கொடுமுடி – வடக்கு புதுப்பாளையம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகனாகிய சுரேஷ் என்பவரே தற்கொலை செய்து உயிரை மாய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னையம்பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்த நிலையில், அப்பகுதியில் இயங்கி வந்த கிருபா காட்டன் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது பெற்றோர்கள் இவருக்கு பல வருடமாக திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர்.

இருப்பினும், அவருக்கு 37 வயதான போதும் திருமணத்திற்கு வரன் எதுவும் அமையவில்லை. இவ்வாறான சூழலில், கடந்த வாரம் அவருக்கு பெண் பார்த்தபோது ஜாதகமும் பொருந்தவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது இதுவரை திருமணம் ஆகாத விரக்தியில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்ம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் மொடக்குறிச்சி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சுரேஷ் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பில் சுரேஷின் தந்தை பழனிசாமி அளித்த புகாரின் பெயரில் மொடக்குறிச்சி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here