மல்லிகைப்பூ சந்தியில் மலர்ந்த கலைஞன் என்றும் ஆக்க இலக்கிய படைப்பாளி என்றும், இன்னும் ஏதேதோ துறையில் தான் ஒரு ஜாம்பவான் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மல்லியப்பூ சந்தி திலகர் காதல் ரோஜா கனவு பலிக்காது என்பது கலையைப் பற்றி கொச்சைப் படுத்துகிறாரா? இல்லை தனது கனவு பலிக்காது என்று நினைக்கின்றாரா? யார் இந்த திலகர்? என இ.தொ.கா ஊடகப் பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள பதில் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நேற்றுவரை தம்பி, இன்றுதான் எம்.பி. ஒரு இமயத்தைப் பார்த்து எந்த வகையிலும் பொறாமை கொள்வது பிரயோசனமில்லை. ஆறுமுகன் தொண்டமான் அன்றும் இன்றும் என்றும் அடைக்கலம் தேவைப்படுபவர்களுக்கு அமைச்சர். இதனைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு சகோதர மொழியின் ஆளுமையும், கூற்றையும் குரலையும் கொச்சைப்படுத்துவது திலகரின் அறியாமையை அடையாளப்படுத்துகின்றது. வந்ததெல்லாம் வார்த்தையென வார்த்தையாகக் கூற முடியாது.
எமது தலைவர் எதனையும் நிதானித்து, அணுகு முறையால் மிக சாதூரியமாக பேசக்கூடிய தன்மை அவருக்குண்டு. அமைச்சர் பதவியை தேடவில்லை. அந்த அமைச்சு அவரைத் தேடி வரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
அமைச்சராக இருந்து கொண்டு சாதிக்க முடியாதவற்றை ஆள்காட்டி விரலை அசைத்தாலே ஆறுமுகனால் சாதிக்க முடியும் என்பதை திலகர் மட்டுமல்ல, உலகமறிந்த விடயமாகும். நினைத்ததைச் செயலாக்கும் துணிச்சல் மிக்க தலைமகன் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. 4,000 வீடுகளுக்கும் 10,000 வீடுகளுக்கும் இ.தொ.கா வே சொந்தக்காரர்கள். ஆளுமையற்ற அமைச்சர்கள் மேடைகளில் அறிவிப்பாளர்களாக தோன்றும் புதிய காட்சி இப்போது மலையகத்தில் உலா வருகின்றது. 2020ல் ஆறுமுகன் மலையகத்தின் பிரபல அமைச்சராகுவார் என்பது சோஷியம்.
ஆனால், இன்று ஆஷியமாகப் பேசி முடித்த திலகருக்கு மீண்டும் ஒரு ரோஜாவை இ.தொ.கா கொடுக்கக் காத்திருக்கின்றது. இப்போது பயம் பதறிக் கொண்டு வந்திருக்கும் அவர்களுக்கு வெகு விரைவில் அதிர்ச்சி வைத்தியம் பார்க்க நேரிடும் என்கிறது இ.தொ.கா.
தேவதாஸ் சவரிமுத்து
ஊடக இணைப்பாளர்