தில்லு இருந்தால் மோதி பாரு மூக்கை உடைத்து காட்டுகிறேன் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

0
130

எனது இரத்தத்தின் இரத்தங்களே என்றும் நாங்கள் உங்களுடன் தில்லு இருந்தால் மோதி பாரு மூக்கை உடைத்து காட்டுகிறேன் என தனது மேதின உரையை நுவரெலியாவில் ஆரம்பித்த ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் செப்டம்பர் மாதம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமானதும் உயர்வுமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் என தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 76வது மேதின அனுஷ்டிப்பு நுவரெலியா மாநகரின் மத்தியில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தாங்கி நடத்திய இந் மேதின கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த கூட்டு ஒப்பந்த காலப்பகுதியில் பலர் ஆடிய ஆட்டங்கள் மக்கள் அறிந்தது இம்முறை அவ்வாறாக இல்லாது எதிர்வரும் செப்டம்பர் மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான உயர்வான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் இ.தொ.கா முன்மும்மரமாக உள்ளது.

11 பேரின் ஆட்டத்தை தகர்த்து காட்டுகின்றேன். கூட்டு ஒப்பந்தத்தை இ.தொ.காவே முன்னெடுக்கும் என்பதையும் மக்களுக்கு வேண்டியவாறு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதிலும் உறுதியாக உள்ளேன் என தெரிவித்தார்.

மக்களுடைய சக்தியும் கட்டுப்பாடும் ஒற்றுமையும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பொது காணப்பட்டதனால் நாம் கூறியவாறு நுவரெலியா மாவட்டத்தில் 11 சபைகளை கைப்பற்றி சிலரின் மூக்கை உடைத்தோம்.

அதேபோன்று எதிர்வரும் காலத்திலும் தில்லு இருந்தால் மோதி பார்க்கட்டும். மூக்கை உடைத்து காட்டுகின்றேன் எனவும் கூறினார்.

இப்பொழுது தோட்ட பகுதிகளில் வெளியிட வேலையாட்களை அமர்த்தும் (அவுட் குறப்) சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தொழிலாளர்களின் வேலை நாட்களை 12 நாட்களாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக தோட்ட நிர்வாக சில உறுதிபத்திரங்களில் தோட்ட தலைவர்கள் மற்றும் தலைவிகளிடமும் கையொப்பம் இடும்படி கேட்டு வருகின்றனர். இதனை ஒரு காலமும் இ.தொ.கா ஏற்றுக்கொள்ளாது. அத்தோடு இத்திட்டத்திற்கு இடமும் கொடுக்காது.

எனவே தோட்ட நிர்வாகங்கள் உறுதிபத்திரங்களில் கையொப்பமிட தலைவர்களை மற்றும் தலைவிகளை அழைத்தால் என்னோடு கலந்தாலோசித்த பின்பே முடிவுகளை எடுக்கவும் என வழியுறுத்திக் கொண்ட இவர் இவ்வாறு செய்யப்படும் ஒப்பந்தங்களில் சில உள்குத்துகள் காணப்படுவதனால் சட்ட ரீதியான ஆலோசனைகளை பெற வேண்டும் என்றார்.

அதேவேளையில் இன்று எனது கரத்தை மலையக மக்கள் பலப்படுத்தி உள்ளார்கள். அதற்கேற்ப பிராந்தியவாறியாக மக்கள் முன் சென்று அவர்களின் குறையை எதிர்வரும் காலத்தில் ஆராயவுள்ளேன்.

இ.தொ.காவையும் அதன் மக்கள் சக்தியையும் எவராலும் பிரிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here