தில்ஷானுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை

0
34

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷான், ஒரு குடியுரிமை விழாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் தெரிவித்துள்ளார்.

“ஒரு நாள் போட்டி வரலாற்றில் சிறந்த இலங்கை வீரராக தில்ஷன் கருதப்படுகிறார். 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் 500 ஓட்டங்கள் மற்றும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அதிக ஓட்டம் எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும், 2014 ஐசிசி இருபதுக்கு 20ஐ வென்ற இலங்கை அணியில் அவர் அங்கம் வகித்தார்” என எம்.பி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

புதிய ஆஸி மற்றும் உள்ளூர்வாசி என்ற வகையில், தில்ஷான் உள்ளூர் அணியில் இணைந்து தனது திறமைகளை சமூகத்துடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்வார் என நம்புவதாக குறித்த எம்.பி தெரிவித்துள்ளார்.

“அவரது மகள் ரெசாண்டி தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here