தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் லிந்துலை கௌலஹேன கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 06 பேர் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி திஸ்பனை கலிடோனியா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் 13 ம் 14 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது .
நுழைவு கட்டணம் 1500 ரூபா வழங்கவேண்டும் .
இப்போட்டியில் கலந்துகொண்டு முதலாம் இடத்தினை வெற்றிக்கொள்ளும் அணிக்கு 20.000 பணமும் வெற்றிக்கேடயம் சான்றிதழ் இரண்டாம் இடத்தினை பெறும் அணிக்கு 15.000 ரூபா பணமும் வெற்றிக்கேடயமும் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெறும் கழகத்திற்கு வெற்றிக்கேடயம் வழங்கப்படவுள்ளதுடன் சிறந்த துடுப்பாட்ட வீரர் சிறந்த பந்து வீச்சாளர் தொடர் ஆட்ட நாயகனுக்கான பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சகல அணிகளும் காலை 08 மணிக்கு சமூகம் தரவேண்டும்.
இப் போட்டிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள 0773436860 0778678693 076 4314771 ஆகிய இலக்கத்துடன் தொடபுகொள்ளமுடியும்.
அக்கரப்பத்தனை நிருபர்