ஐக்கிய கொட்டக்கலை வர்த்தக சங்கத்தின் கூட்டம் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தொடரில் கொட்டகலை நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்களின் விலையை கூடிய விலைக்கு விற்காமல் நிர்ணய விலையிலும் அதே நேரத்தில் மலிவு விலையிலும் விற்பனை செய்வதற்கான தீர்மானம் இன்று எடுக்கப்பட்டது.
இதன்போது நுவரெலியா விலை கட்டுப்பாட்டு சபை பிரதானி அமில ரத்நாயக்க,சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் உட்பட கொட்டகலை வர்த்தகர்கள் கலந்துக்கொண்டனர்.
நீலமேகம் பிரசாந்த்