இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எலபாத்த பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, வேறகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த இளைஞன், துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் எலபாத்த பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.