வறுமையில் வாடும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

0
63

வறுமையில் வாடும் மக்களின் வாழ்வாதாதரத்தை உயர்த்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலத் திட்டங்களுக்காக கூடுதலாக 200 பில்லியன் ஒதுக்கப்படும்.

இதற்காக இந்த ஆண்டுக்குள் 700 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு உலக வங்கியின் இரண்டு பெரிய கடன்கள் எதிர்பார்க்கப்படுவதாக திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக வங்கியின் நிதியானது குறைந்த வருமானம் பெறும் மூன்று மில்லியன் குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி அளிப்பது உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக வழங்கப்பட உள்ளது.வவுச்சர் அமைப்பு அல்லது பொருள் விநியோகம் மூலம் உதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியானது சிறுநீரகம்,இதய நோயாளிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு மருத்துவ கொடுப்பனவுகளை வழங்கவும் பயன்படுத்தப்படும்.அத்துடன் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சுமார் 30 லட்சம் பேரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை தொகை 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செப்டம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here