துறைமுக ஊழியர்கள் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறிப்பாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகவும் துறைமுக அமைச்சில் காணப்படும் ஊழல்களை எதிர்த்தும் பல கோரிக்கைகளை முன்வைத்து துறைமுக ஊழியர்கள் சங்கம் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மேலும், துறைமுக சொத்துக்களை அதன் அமைச்சரான அர்ஜூன ரணத்துங்க தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும் இது போன்ற பல ஊழல் செயற்பாடுகளில் அமைச்சர் ஈடுபடுவதாகவும் துறைமுக ஊழியர்கள் சங்கம் குற்றம் சுமத்தியது.
குறிப்பாக மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு உரிய முடிவுகள் கிடைக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறி கட்டிடமென்றில் ஏறிநின்று ஊழியர்கள் மூவர் தமது எதிர்பை வெளிகாட்டி வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.