தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகொலை பகுதியை சேர்ந்த 11வயதுடைய சிறுமியே 23.04.2018 முற்பகல் 11 மணியளவில் தனது வீட்டின் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறையில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் குறித்த சிறுமியை அயலவர்களின் உதவியுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்