தென்னை மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் இந்த சம்பவம் நேற்று (6) இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டு முற்றத்தில் நின்ற சுமார் 50 அடி உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் போது கால் வழுக்கி நிலத்தில் விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சித்தாண்டி -02, பிரதான வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய சிவகுரு குமாரசாமி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.