இலங்கையில் தெமடபிட்டிய தம்மிக்ககம என்ற பிரதேசத்தில் ராட்சத ராஜ நாகம் ஒன்று சிக்கியுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள தேங்காய் தோட்டத்தில் இருந்து பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10 அடிக்கும் அதிக நீளமான இந்த பாம்பு உயிரிழந்துள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தின் காவல் நடவடிக்கையில் ஈடுபடும் சரத் என்பவரினால், புல் வெட்டிக் கொண்டிருந்த சந்தர்பத்தில் இந்த நாக பாம்பு உயரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதிக வயது காரணமாக பாம்பு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.