தம்புள்ளை – லென்தொர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் கம்பியிலான கொழுவியினை பயன்படுத்தி தேங்காய் பறிக்க முற்பட்டுள்ள நிலையில் மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , அவர்களை காப்பாற்றச் சென்ற அவரது 20 வயதுடைய மகன் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.