சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 – 120 ரூபாய் வரையிலும், சிறிய அளவிலான தேங்காய் 85 – 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
அன்றாட உணவு தயாரிப்பதற்கு அத்தியாவசியமான தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் தாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது தேங்காய் அறுவடைக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் இது பெப்ரவரி இறுதி வரை நீடிக்கலாம் என தென்னை அபிவிருத்திச் சபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த வருடம் 3300 மில்லியன் தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாக தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.