முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டிலிருந்து 1009 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த தகவலை வெளியிட்டார்.
795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் போத்தல்களுமே கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசபந்து தென்னகோனின் வீட்டை சிஐடியினர் நேற்று சோதனைக்கு உட்படுத்தியபோது இரண்டு கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான ஹோகந்தரவில் உள்ள வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின்போதே இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.