தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கான அறிவிப்பு

0
20

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த விசேட கடிதம் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் தென் மாகாண உதவி ஆணையாளர் எம்.எல்.ஏ. சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சேவையின் ஊடாக தென் மாகாண காரியாலயத்தில் 300 தேசிய அடையாள அட்டைகள் நாள்தோறும் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பாகத்தில் வசிப்பவரும் இதற்காக விண்ணப்பம் அனுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவையின் ஊடாக வருடமொன்றுக்கு 40000 முதல் 45000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 26696 அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் செய்த அனைவருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here