2015 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி சீர்திருத்தமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கமைய ஆசிரியர்கள் மற்றும் பணிப்பாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வுகள் தற்போது அட்டனில் நடைபெற்று வருகிறது.
தேசிய கல்வி நிறுவகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வுகளை அட்டன் கல்வி வலயம் நடத்தி வருகிறது. அதற்கமைய நேற்று (04) நுவரெலியா மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களின் தரம் 10, 11 வணிகக்கல்வி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றது.
இதில் அட்டன் கல்வி வலயத்தின் வணிகக்கல்வி பாட பணிப்பாளர் திரு சுரேந்திரன் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் திரு சாரங்கன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன்று (05) குறித்த 5 கல்வி வலயங்களை சேர்ந்த பணிப்பாள்கள் மற்றும் அதிபரளுக்கான அமர்வு நடைபெறவுள்ளது.
வணிகக் கல்வி பாடத்தை கற்கும் மாணவர் தொகையை 35% ஆக அதிகரிக்கும் அரசின் நோக்கத்திற்காகவே இவை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கல்வி நிறுவகத்தின் வணிக பாடத்தின் தலைவரும் செயற்றிட்ட பணிப்பாளருமான திரு S . K- பிரபாகரன் இச்செயலமர்வுகளை நடத்தி வருகிறார்.
சுஜீவன் – தலவாக்கலை