கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்;தில் (14) இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது முதலாம் அமர்வு இந்து கல்லூரியின் பிரதான மண்டபத்திலும் இரண்டாம் அமர்வு மைதானாத்தில் விஷேடமாக அமைக்கபட்ட கலையரங்கில் நடைபெற்றது.
முதலாம் அமர்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது தேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கபட்டன. இரண்டாம் அமர்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இந்தியாவில் இருந்து வருகை வந்த சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்களின் சிறப்பு பேருரையும் இடம் பெற்றது.
பா.திருஞானம்