தேநீருடன் காலை உணவு கொடுக்காததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

0
118

இந்தியா மாநிலம் மகாராஷ்டிராவில் தேநீருடன் காலை உணவை வழங்காததால் கோபமடைந்த மாமனார் மருமகளை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில், மாமனார் தனது ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டதில் மருமகள் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

42 வயதான அந்தப் பெண்ணுக்கு அடிவயிற்றில் குண்டடி காயம் ஏற்பட்டு, நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் (76) மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கட்டேகர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவரின் மற்றொரு மருமகள் அளித்த புகாரை மேற்கோள் காட்டி அதிகாரி, இந்த சம்பவம் வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் நடந்ததாகக் கூறினார்.

காயமடைந்த பெண்ணை குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

தாக்குதலுக்கு வேறு ஏதேனும் தூண்டுதல் இருந்ததா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here