மலையகத்தில் தேயிலை உற்பத்திதுறையில் பாரிய வீழ்ச்சியையே தோட்ட நிர்வாகங்கள் அன்மை காலமாக காட்டி வருகின்றனர். இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிநோக்கி வரும் இன்னல்கள் அனைவரும் அறிந்த விடயம். இவ்வாறான நிலையில் பல தோட்டங்கள் ழூடப்பட்டும் வருகின்றது. இதனால் எதிர்காலத்தில் தேயிலை உற்பத்திதுறை கேள்விக்குறியாகி உள்ள நிலையில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் புஸ்ஸல்லாவ பிளாண்டேசனுக்கு சொந்தமான தோட்டங்கள் மீள் எழுச்சி பெற்று வருகின்றது.
கைவிடபட்ட தேயிலை மலைகள் மீள் துப்பரவு. தேயிலை கன்றுகள் நாட்டல், வேலைக்கு புதியவர்கள் இணைத்துக் கொள்ளல், முறையான வேலை வழங்கள், தொழிலாளர்கள்சார் நலன்புரி சேவைகள், வீடமைப்பு, தேயிலை தோட்டங்களை அபிவிருத்தி செய்ய பாரிய முதலீடுகள், குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும் முன்னுரிமை போன்ற இன்னோரன்ன வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களின் இந்த வேலைத்திட்டதின் ஒரு கட்டமாக இந்த தோட்டங்களில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களை மறக்காமல் இருப்பதற்காக வருகின்ற தீபாவளி தினத்தற்கு தேவையான உடை உலர் உணவு பொருட்களை வழங்கி அவர்கள் இந்த தோட்டங்களுக்கு செய்யத சேவையை தோட்டம் தோட்டமாக சென்று (08) பாராட்டி வருகின்றனர். மேற்படி புஸ்ஸல்லாவ பிளாண்டேசன் நிறுவனம் தற்போது “டம்ரோ” நிறுவனத்தினால் நிறுவகிக்கபட்டு வருவது குறிப்பிடதக்கது.
இந்த வேலைதிட்டம் தொடர்பில் பிளாண்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சமிந்த சேனாரத்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எமது நிறுவன தலைவரின் சிறந்த வழிகாட்டலே இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க காரணமாக இருக்கின்றது. இந்த தோட்டத்தில் 50 வருடங்களுக்கு மேல் வேலை செய்து ஓய்வு பெற்ற இந்த முதியவர்களாலயே இந்த தோட்;டத்தின் தேயிலை செடிகள் தற்போது காட்சி அளிக்கின்றது. அதனாலயே இன்று நாங்கள் இங்கு இருக்கின்றோம் அதனால் அவர்களை மறக்க கூடாது என்பதினாலயே இவ்வாறான வேலைத்திட்ங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது நிறுவன தலைவரின் கருத்தும் எண்ணமும் அதுவாக இருகின்றது என்று கூறினார்.
இந்த பொருட்களை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சமிந்த சேனாரத்தன அவர்களுடன் இணைந்து தோட்ட முகாமையாளரகள், உத்தியோகஸ்தர்கள் வழங்கி வைத்தனர். உண்மையாகவே இவ்வாறு தோட்ட நிர்வாகங்கள் முறையாக நடந்துக் கொள்ளுமானால் மலையத்தின் பெருந்தோட்டங்கள அபிவிருத்தி அடையும் மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள். ஆகவே இவ்வாறான வேலைதிட்டங்களை முன்னெடுக்கும் தோட்ட நிர்வாகத்தை நாழும் பாராட்டுவோம்.
பா.திருஞானம்