தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான தேயிலை ஏற்றுமதி வருமானம் சுமார் பத்து வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இரண்டு மாத காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 221.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டது.
இந்த ஆண்டில் அந்தத் தொகை 200.4 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி மற்றும் கேள்விக் குறைவடைதல் ஆகிய காரணிகளினால் இவ்வாறு வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக ஆய்வு பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தேயிலை வருமானம் மற்றும் விலை வீழ்ச்சியானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.