தேயிலை காணிகளை பிரித்துக்கொடுக்கும் போர்வையில் தொழிலாளியின் உழைப்பு சூரையாடப்படுகின்றது!

0
30

தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் பல தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் தோட்ட கம்பனிகள் பிரித்து கொடுக்கும் போர்வையில் தொழிலாளியின் உழைப்பினை சூரையாடப்படுவதாக இலங்கை செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்தார்.
தோட்டக்காணிகள் பிரித்துக்கொடுக்கப்படுவது தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். தோட்ட காணிகளை பிரித்து கொடுப்பது தொடர்பாக அரசாங்கமும் சில தொழிற்சங்கங்களும் முயற்சித்து வருதாக நாங்கள் அறிகிறோம்.

ஆனாலும் கூட காணிகளை பிரித்து கொடுப்பது என்றால் தோட்டத்தொழலாளர்களுக்கு சகல உரிமைகளுடன் ஒப்பனையுடன் வழங்கப்பட வேண்டுமே தோட்டத்தொழிலாளர்களுக்கு காணிகளை பிரித்து கொடுக்கிறோம். என்று பெயரளவில் பிரித்துக்கொடுக்கக் கூடாது காரணம் இதற்கு முன்னரும் காணிகள் சொந்தமாக்கப்பட்டது என சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலும் தெரிவிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து பல அரசியல்வாதிகள் வீடுகள் சொந்தமாக்கப்பட்டுள்ளது என்றார்கள் ஆனால் இது நாள் வரை அந்த உறுதி பத்திரங்கள் செல்லுபடியாகாது என்ற நிலையிலேயே உள்ளதே தவிர காணி அளவிட்டு அதற்கான முழுமையான உறுதி பத்திரம் முறையாக வழங்கப்படவில்லை இதற்கு சிறந்த உதாரணமாக தெனியாய பகுதியில் உள்ள எனசல் தோட்டத்தினை குறிப்பிடலாம்.

குறித்த தோட்டத்தில் ஐந்து பிரிவில் நிரந்தர தொழிலாளர்களாக வேலை செய்து வந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு தேயிலை காணிகளை உங்களுக்கு பிரித்து தருகிறோம் நீங்கள் நிரந்தர தொழிலிலிருந்து விலகி சேமலாப நிதியத்தினை பெற்றுக்கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு காணிகளை பெற்றுத்தருகிறோம் என ஒப்பந்தம் ஒன்றினை தோட்ட கம்பனியே தயாரித்து தொழிலாளர்களுக்கு கொடுத்து தொழிலாளர்களும் அதனை நம்பி சேவைகால பணத்தினை பெற்றுக்கொண்டு அவர்கள் காணிகளை பெற்றுக்கொண்டார்கள் குறித்த ஒப்பந்தத்தில் உரம் பொடுவது மருந்து தெளிப்பது துப்பரவு செய்வது பராமறிப்பு செய்வது உள்ளிட்ட அத்தனையும் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் தேயிலை கொழுந்தினை வெளியில் விற்க முடியாது அதனை எங்களுக்கே தரவேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது படிப்பறிவு இல்லாத தொழிலாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டு காணிகளையும் பெற்றுக்கொண்டார்கள்.

அதனை தொடர்ந்து முழு குடும்பமே தேயிலை மலையில் வேலை செய்து முதல் மாதத்தில் 50000 வரை சருமானத்தினை பெற்றார்கள் அதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகம் உரம் விலையேற்றம் காரணமாக உரம் வழங்க முடியாது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டது இதனால் தொழிலாளர்கள் உரம் போடுவதற்கு வசதியின்றி மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளானார்கள் இதனால் அவர்களின் குடும் பாரிய பொருளாதா நெருக்கடிக்கு உட்பட்டு சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தார் பிள்ளைகள் இனியில்லாத துன்பங்களுக்கு ஆளாகி பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர் பலர் கடைகளில் வேலைக்கு சென்றார்கள் அதனை தொடர்ந்து எங்கள் சங்கம் அந்த தோட்ட நிர்வாகம் படிப்பறிவில்லை.

மக்களை ஏமாற்றி இவ்வாறு காணிகளை முறையற்ற விதத்தில் பிரித்து கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது என தொழில் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியதனையடுத்து அது பிழையானது என தொழில் ஆணையாளர் தெரிவித்ததனை தொடர்ந்து இப்போது கம்பனிகள் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றுள்ளது எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கு சேவைகால பணத்தினையும் இல்லாது போய் வருமான வழியும் இல்லாது போனதுமே ஆகின எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கு காணிகள் பிரித்து கொடுப்பதென்றால் முழு உரிமையுடன் சட்டபூர்வமான ஒப்பனையும் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here