அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கிவரும் அதிகமான தோட்டங்களின் தேயிலை நிறுவையில் அண்மைகாலமாக மோசடி இடம்பெற்றுவந்துள்ளது.
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் காண்ப்படும் அக்கரப்பத்தனை,டயகம ஆகிய பகுதிகளிலே இவ்வாறான நிறுவை மோசடி இடம்பெற்றுள்ளது.இது தொடர்பாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை தமது பிரதிநிதிகளிடம் முறையிட்டுள்ளனர்.
முறைப்பாடு கிடைக்கபெற்ற இ.தொ.கா வின் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கௌரவ.கதிர்ச்செல்வன்,அக்கரப்பத்தனை பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர்கள்,அமைப்பாளர்கள்,மாவட்ட தலைவர் ஆகியோர் சம்பந்தப்பட்ட தோட்டங்களின் கொழுந்து நிறுக்கும் இடங்களுக்கு சென்று தரசு,நிறுக்கும் முறை தொடர்பான அவதானித்ததோடு பல தோட்டங்களிள் தேயிலை நிறுக்கும் தராசில் மோசடி செய்து தேயிலை நிறைகள் குறைவாக நிறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உனடியாக இ.தொ.கா வின் தலைவரும் பொதுச்செயலாளருமான கௌரவ. ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதோடு, குறித்த தோட்ட நிர்வாகத்தினர்,முகாமையாளர்களுடன் இது தொடர்பான கலந்துறையாடி இவ்வாறான மோசடியான செயற்பாடுகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.