தேர்தலில் வெற்றிப்பெற்ற கையோடு அட்டனில் போதைப்பொருளை ஒழிப்போம்; ஆறுமுகன் முழக்கம்!

0
139

நாட்டில் உள்ள நகரங்களில் இன்று அட்டன் நகரம் போதைப்பொருட்கள் விற்பனையாகும் ஒரு முக்கிய நகரமாக மாறியுள்ளது. இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உடனேயே அட்டனிலிலுள்ள போதைப்பொருட்களை ஒழித்து ஒரு தூய்மையான நகரமாக மாற்றியமைப்போம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

அட்டன் டிக்கோயா நகரசபைக்கு ஆரியகம தொகுதியில் போட்டியிடும் வர்த்தகர் சோமசுந்தரம் ஹைலன்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.விஜயசிங் ஆகிய இருவரையும் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு அட்டன் தும்புறுகிரிய வீதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அட்டன் நகரில் கட்டடங்களுகிடையில் நெருப்பு பாதுகாப்பு இடைவெளியில்லை. புதிதாக கட்டப்படும் கட்டடங்களும் அப்படிதான் இருக்கின்றன எங்கள் உறுப்பினர்கள் தெரிவான உடன் இவற்றிக்கான சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து இந்த நகரத்தினை அபிவிருத்தி செய்வோம்.

இன்று கடைகள் வழங்குவதில் கூட ஒரு சில ஊழல்கள் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்போம். அத்தோடு கடந்த காலத்தில் அட்டன் நகரம் பல மாதக்கணக்காக குப்பைக்கூளங்களாக காணப்பட்டன.

அதனை ஒரு சில மணித்தியாலங்களில் நானே சுத்தம் செய்தேன். எனவே நாங்கள் ஒரு போதும் அதை செய்து தருகிறோம் இதை செய்து தருகிறோம் என்று வாக்கு கேட்கவில்லை. வேலை செய்து விட்டுதான் வாக்கு கேட்கிறோம். இன்று சேவல் சின்னத்தில் போட்டியிடுபவர்களும் எதிலும் சலைத்தவர் அல்ல அவர்களும் மக்கள் சேவைகள் செய்து விட்டு தான் உங்கிடம் வாக்கு கேட்கிறார்கள் எனவே சேவல் சின்னத்திற்கும் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எனக்கு அளிக்கும் வாக்கேக சேவல் சின்னதிற்கு சொந்தக்காரன் நான் எனவே சேவலுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எனக்கு அளிக்கும் வாக்குகளே என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here