தேர்தலுக்கு தயார் – ஜனாதிபதி விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு

0
48

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அந்தந்த கட்சிகளின் மாவட்ட அரசியல் தலைவர்களின் பங்களிப்புடன் அரசியல் வழிநடத்தல் குழுவொன்றை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த விசேட கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் ஏனைய அரசியல் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு இலக்கை நோக்கிச் செயற்பட வேண்டுமென இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான வழிநடத்தல் குழுவை ஆரம்பிக்க வேண்டுமாயின் முதலில் அந்தந்த கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும் என பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி குழு சார்பில் அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சபைத்தலைவர் சுசில் பிரேமஜயந்தவும் அந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.இதன்படி எதிர்காலத்தில் இந்த கலந்துரையாடல் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டு அதற்கான வழிநடத்தல் குழு நியமிக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here