தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விசேட பேருந்து சேவை!!

0
115

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்கவரத்து சபையின் போக்குவரத்து நடவடிக்கைக்களுக்கான கடமை நேர அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த விசேட சேவைகள் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தேர்தல் தினத்தன்றும் அதன் மறுதினத்தன்றும் இந்த சேவைகள் நடைமுறையில் காணப்படும் என கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here