நாங்கள் காபட் பாதையில் மிகவும் அழகாக பயணம் செய்துகொண்டிருந்தோம் ஆனால் திடீரென பெய்த ஒரு சிறு மழை காரணமாக அந்த பாதை சற்று பழுதடைந்துள்ளது.
அதன் காரணமாக வண்டி சற்று ஆட்டம் கண்டுள்ளது.தற்பொழுது அந்த பாதை விரைவாக காபட் இடப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டு
வருகின்றது.மீண்டும் அந்த அழகிய பாதையில் இந்த அரசாங்கம் பயணிக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
புலத்கோபிட்டியவில் அமைந்துள்ள எதிராபொல தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வரிய குடும்பங்களை சேர்ந்த 312 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளும் வாசிகசாலைக்கான நூல்களும் நேற்று முன்தினம் (21.02.2018) மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்
முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வழங்கி வைத்தார். இதன்போது கனடா நாட்டின் குளோபல் நிறுவனத்தின் இணைப்பாளர் திருமதி சரோஜா தனபாளன் மற்றும் லண்டனில் இருந்து வருகை தந்துள்ள நிமால்
சண்முகநாதன்ரூபவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன்; மேற்கொண்டிருந்தார்.
இதே வேளை யட்டியாந்தோட்டை பனாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரணியகல மியனவிட தமிழ் வித்தியாலயம் நாஎல்ம தமிழ் வித்தியாலயம் திகல தமிழ் வித்தியாலயம் பூனுகல தமிழ் வித்தியாலயம் பொலட்டகம் தமிழ் வித்தியாலயம் ஆகிய ஜந்து
பாடசாலைகளுக்கும் இந்தியாவின் விஜிபி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஜி.பி.சந்தோசம் அவர்களால் கல்வி இராஜங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க அன்பளிப்பு செய்யப்பட்ட 500 வாசிகசாலை புத்தகங்களும் தலா ஒரு பாடசாலைக்கு 100 வீதம் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தை தங்களுடைய வாக்குகளால் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வில்லை என்பதும் குறிப்பாக தேங்காய் விலை அதிகரிப்பு விசேடமாக திருடர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததையும் தங்களுடைய எதிர்ப்பாக காட்டியிருக்கின்றார்கள்.
இதனை அரசாங்கம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.இந்த நாட்டின் கீழ் மட்டத்தில் இருக்கின்றவர்களுக்கு அன்றாடம் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெரும் தாக்கம் nசுலுத்துகின்றது.எனவே நிச்சயமாக
அதற்கான ஒரு தீர்வை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர்களை பாதுகாப்பது போன்ற ஒரு நிலை மக்கள் மத்தியில் இருக்கின்றது.இந்த அரசாங்கம் கடன்களை செலுத்தி வந்தாலும் அதனைவிட கீழ் மட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
ஏந்த காரணம் கொண்டும் ஜனாதிபதியும் பிரதமரும் தனித்தனி பாதைகளின் பயணிக்க முடியாது.அப்படி பயணித்தால் அவர்கள் மக்கள் 2015 ஆம் ஆண்டு வழங்கிய ஆனையை மீறி செயற்படுவதாகவே அர்த்தம்.அடுத்த மாகாண சபை தேர்தலை சந்திப்பதற்கு முன்பதாக இந்த விடயங்கள்
தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும்.இல்லாவிட்டால் அடுத்த தேர்தலின் தோல்வியையும் யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உரையாற்றும் போது……….
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு 077-7757815