தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ரணில் விக்கிரமசிங்க!

0
19

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025 இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை ஆகிய 05 பிரதான கூறுகளை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது.

இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் நாட்டிற்கான கொள்கை பிரகடனமும் இன்போது முன்மொழியப்பட்டிருந்தது.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது இயலும் ஸ்ரீலங்காவின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த நாடு படிப்படியாக மீட்சியடைந்ததன் பின்னர் மேலும் ஒரு அடியை எடுத்து வைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here