இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவுக்கு பொறுப்பாக இளைஞர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுவருவதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.இ.தொ.காவின் ஊடக இணைப்பாளராக இதுவரைகாலமும் பணியாற்றிவந்த தேவதாஸ், அப்பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ளார். உட்கட்சித்தகவல்கள் வெளியில் கசிதல் உட்பட மேலும் சில காரணிகளைக்கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊடகப்பிரிவில் வெற்றிடம் ஏற்பட்டது. மறுபடியும் தனிநபரொருவரிடம் அதை ஒப்படைக்காமல், கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் குழுவொன்றை அமைத்து, ஊடகத்தொடர்பை முறையாக பேணுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டுவருகின்றது.
பாண்டியன்