தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையாற்றுவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!!

0
142

அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையாற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) பிற்பகல் அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய அரசாங்கமொன்றில் பிரச்சினைகள் நிலவுவது சாதாரண விடயம் எனவும் இரண்டு தலைவர்கள் இருப்பதனால் நல்லாட்சி பயணத்திற்கு பாதிப்பு இல்லை எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோல் , இம்முறை தேர்தலில் பொதுமக்களிடம் இருந்து கிடைந்த எச்சரிக்கையை தாம் ஏற்பதாக தெரிவித்த பிரதமர் அதன்படி, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here