நேற்றைய தினம் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததன் காரணமாக பணிப்புறக்கணிப்பினை தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு அமைய மூன்றாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.
வேதன உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன வழமை போலை இடம்பெற்றது இருந்தும் மருந்து வழங்கும் பகுதி மூடப்பட்டிருந்தது. மருந்துகளை பெற்றுக்கொள்ள பாரிய சிரமத்துக்கு முகம்கொடுத்தனர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாநகர சபையினால் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் பிட்போடப்பட்டுள்ளது.
டி.சந்ரு செ.திவாகரன்