தொடர்ந்து பெருந்தோட்ட மக்களின் உரிமையையும், அபிவிருத்தியையும் முன்னெடுப்போம்- திகாம்பரம் தெரிவிப்பு!!

0
85

மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கன அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்தார்22.04.2018 நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 07.05.2018 இடம்பெற்றவுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டம் தொடர்பிலான விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கம் சார்ந்த தமிழ் முற்போக்கு கூட்டனியானது மலையக அபிவிருத்தி மட்டுமல்லாது மலையக மக்களின் உரிமைக்காகவும் போராடி வருகின்றது இந்த உரிமை போராட்டம் தொடருந்து முன்னெடுக்கப்படுவதுடன் இன்று பெருந்தோட்ட பகுதிகள் கட்டம் கட்டமான அபிவிருத்தியை பெற்று வருவதுடன் நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகள் அதிகரிப்பு காணி உரிமைகள்,லயன் குடியிருப்புகளை இல்லாதொழித்து தனிவீட்டுத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

எனது பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு எதிர்வரும் மே மாதம் 7 ம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டம் தலவாக்கலை நகரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இம் மேதினம் தொழிலாளர் உரிமையை பிரதிபளிக்கும் வகையில் அமையும் எனவும் தெரிவித்தார்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here