இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த , எஹெலியகொட, கிரியெல்ல, அயகாம, இரத்தினபுரி, கொலொன்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் அதிக மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் சாத்தியம் உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.