வானிலை அவதான நிலையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டில் அடைமழை குறைவடையும் சாத்தியம் உள்ள போதிலும் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.