தொண்டமானின் பெயர் அழிக்கப்பட்ட இடத்தில் அதனை மீள எழுத ஆலோசனை!!

0
86

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் அழிக்கப்பட்ட இடத்தில் அதனை மீள எழுத ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் அனுதினமும் துன்பம் அனுபவித்த மலையக மக்களை, அதிலிருந்து மீட்க சௌமியமூர்த்தி தொண்டமான்தான் அன்று தலைமைத்துவம் வழங்கினார்.

இந்த நாட்டில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு மதிப்பளிப்பது நீங்கள் மட்டுமல்ல.

எனவே, அவரின் பெயரை யாரேனும் அழிப்பார்களாயின் அது தவறாகும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவரின் பெயரை அழித்தமை குறித்து தாம் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் அழிக்கப்பட்ட இடத்தில் அதனை மீள எழுதவும் தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here