தொண்டமானும் பிரபாகணேசனும் கை கோர்த்தனர்; உள்ளுராட்சி தேர்தலில் ஒன்றிணைந்து களமிறக்கும்!

0
138

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது சொந்த சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் கொட்டகலை சி.எல்.எப் காரியாலயத்தில் இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டதுடன் கொழும்பு,கொலன்னவ,வவுனியா, முல்லைத்தீவு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதுடன் எதிர்வரும் 13ஆம் திகதி குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

DSC_0083-1DSC_0054-1

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரபா கனேசன்,மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நோர்ட்டன்பிரிட்ஜ் நிருபர் மு. இராமச்சந்திரன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here