தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்தவினால் சபையில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தின்படி, தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர், அல்லது செய்திகளை அனுப்புபவர், பிற சந்தாதாரர்களின் தொலைபேசி இலக்கங்களை நியாயமான காரணமின்றி வெளியிடுபவர்கள், எந்தவொருவருக்கும் சிரமம் அல்லது தேவையில்லாத கவலையை ஏற்படுத்துவோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களை மேற்கொள்பவரின் தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்கவும் இந்த சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.