பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக, தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடல், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், மத்திய மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சக்திவேல், கணபதி கனகராஜ், முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் அருள்சாமி, கூட்ட கமிட்டி தலைவர் ராமாநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.