தொழிலாளர் தினமாக இருந்த மே தினம் அரவாதிகளின் கொண்டாட்ட தினமாக மாறியுள்ளது

0
59

தொழிலாளர் தினமாக இருந்த மே தினம் அரவாதிகளின் கொண்டாட்ட தினமாக மாறியுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவிப்பு
மே தினம் என்பது தொழிலாளர்கள் தினம் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சிகரமாக கொண்டுவதே உண்மையான தொழிலாளர் தினம் ஆனால் இன்று அது அரசியல் வாதிகளின் கைகளில் சென்று அரசியல் வாதிகளின் கொண்டாட்ட தினமாக மாறியுள்ளது இந்நிலையில் இந்த தோட்டத்தில் உள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இந்த மே தினத்தினை கொண்டாடுவது உண்மையான மேதினமாகவும் இது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது என மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பாரிய மேதின கூட்டங்களை ஒழுங்கு படுத்தியிருந்த நிலையில் பல தோட்டங்களில் தொழிலாளர்கள் தங்களாகவே முன்வந்து மேதின கூட்டங்களையும் மேதின நிகழ்வுகளையும் ஒழுங்கு நடத்தியிருந்தனர் இந்நிலையில் கொட்டகலை சாமஸ்ட்டன் மேபீல்ட் தோட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;க்கையில் தொழிலாளர்களை இன்று அரசியல் கூட்டங்களுக்கு மேதினத்தினை முன்னிட்டு அழைத்து செல்கிறார்கள் குண்டுசி கூட கொண்டு போகாத தொழிலாளர்களை குண்டு இருக்கிறதா என சோதித்து அதனை தொடந்து தண்ணீர் கூட வழங்கமல் கூட்டம் முடியும் வரை அடைக்கப்படும் நிலையே காணப்படுகின்றன.

இந்நிலை மாற வேண்டும் என்றால் தொழிலாளர்கள் உண்மையாக மேதினத்தினை கொண்டாடக்கூடிய சுதந்திரமும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மே தின கூட்டத்தில் இறந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க வாதிகளை நினைவு கூர்ந்து பூஜை வழிபாடுகளை செய்து தொழிற்சங்க கொடிகளை ஏற்றி பட்டாசு கொழுத்து மேதின கொண்டாட்;;டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியை சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here