தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்கள்

0
69

இந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தை பெருமிதத்துடன் கொண்டாட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்பாடுகளை தொடங்கியுள்ளன. இந்த ஆண்டுக்கான மே தின அணிவகுப்புகள் மற்றும் பேரணிகள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தையில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் இம்முறை கோட்டை சத்’தம் வீதி மற்றும் தலவாகல ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணி இந்த ஆண்டு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹா நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதேவேளை, “நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்காக மக்கள் சக்தி ஒன்றுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிகள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் நடைபெற உள்ளன. கொழும்பு மே தின அணிவகுப்பு பிற்பகல் 2.00 மணிக்கு பி. ஆர். சி ஸ்டேடியத்தில் தொடங்கி மாலை 3.30 மணிக்கு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர மாவத்தையில் நடைபெறவுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணத்தில் மே தின பேரணி நந்தை செல்வா திரையரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மே அணிவகுப்பு பிற்பகல் 2.00 மணிக்கு ராகுல சந்தியிலிருந்து ஆரம்பமாகி பிற்பகல் 3:30 மணிக்கு மாத்தறை கடற்கரைப் பூங்காவில் பேரணி நடைபெறவுள்ளது.

அனுராதபுர மே அணிவகுப்பு வலிசிங்க ஹரிச்சந்திர விளையாட்டு மைதானத்தில் இருந்து பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3:30 மணிக்கு அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெறும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here