தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமமான பழனி திகாம்பரத்தின் பணிபுரைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகஸ்தர் சபைக் கூட்டம் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் அட்டன் தலைமைப் பணிமனையில் நேற்று இடம் பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், பிரதிப் பொதுச்செயலாளர் பி.கல்யாணகுமார்,
உதவி நிதிச் செயலாளர் சிவானந்தன், உப தலைவர்களான
ராஜமாணிக்கம், கே.கல்யாணகுமார், கணேஷன், வைல்ட் மேரி, உதவிச் செயலாளர்களான ஆர்.சிவகுமார், பாலசுந்தரம், இளைஞரணி தலைவர் சிவநேசன், தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.