தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் நோர்வூட் விளையாட்டு மைதான கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அத்தியாகக் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் உரையாற்றுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங். பொன்னையா, எம். ராம், சரஸ்வதி சிவகுரு, பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், அட்டன்-டிக்கோயா நகர சபை முன்னாள் தலைவர் டாக்டர் அழகமுத்து நந்தகுமார், உபதலைவர் வீ. சிவானந்தன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உட்பட முக்கியஸ்தர்கள் அமர்ந்திருப்பதையும், கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.